உள்ளடக்கத்துக்குச் செல்

இடலோ கால்வினோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடலோ கால்வினோ
பிறப்புஇடலோ ஜியோவானி கால்வினோ மாமேலி
(1923-10-15)15 அக்டோபர் 1923
சாண்டியாகோ டி லாஸ் வேகாஸ், கியூபா
இறப்பு19 செப்டம்பர் 1985(1985-09-19) (அகவை 61)
சியனா, டசுக்கனி, இத்தாலி
அடக்கத்தலம்இத்தாலியின் காஸ்டிக்லியோன் டெல்லா பெஸ்காயாவின் கல்லறைத் தோட்டம்
தொழில்எழுத்தாளர், பத்திரிக்கையாளர்
தேசியம்இத்தாலியர்
இலக்கிய இயக்கம்ஓலிபோ, நியோரியலிசம், பின்நவீனத்துவம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • மரங்களில் பரோன்
  • புலப்படாத நகரங்கள்
  • குளிர்கால இரவில் ஒரு பயணி
  • அடுத்த மில்லினியத்திற்கான ஆறு குறிப்புகள்
துணைவர்எஸ்தர் ஜூடித் சிங்கர்
பிள்ளைகள்ஜியோவானா

இடலோ கால்வினோ (Italo Calvino) 15 அக்டோபர் 1923 - 19 செப்டம்பர் 1985) என்பவர் ஒரு இத்தாலிய எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். எங்கள் மூதாதையர்கள் முத்தொகுப்பு (1952-1959), காஸ்மிகாமிக்ஸ் சிறுகதைகளின் தொகுப்பு (1965), புலப்படாத நகரங்கள் (1972), குளிர்கால இரவில் ஒரு பயணி (1979) ஆகிய புதினங்கள் இவரது சிறந்த படைப்புகளில் அடங்கும்.

பிரிட்டன், ஆத்திரேலியா, அமெரிக்காவில் போற்றப்பட்ட கால்வினோ, இறக்கும் போது அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட சமகால இத்தாலிய எழுத்தாளராக இருந்தார். [1] இவர் டசுக்கனியில் உள்ள காஸ்டிக்லியோன் டெல்லா பெஸ்காயாவின் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

பெற்றோர்

[தொகு]

இடலோ கால்வினோ 1923 இல் கியூபாவின் அவானாவின் புறநகர்ப் பகுதியான சாண்டியாகோ டி லாஸ் வேகாசில் பிறந்தார். இவரது தந்தை, மரியோ, ஒரு வெப்பமண்டல வேளாண் அறிவியலாளரும், தாவரவியலாளரும் ஆவார். அவர் வேளாண்மை மற்றும் மலரியலையும் கற்பித்தார். [2] 47 ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியின் சான்ரெமோவில் பிறந்த மரியோ கால்வினோ 1909 இல் மெக்சிக்கோவுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் வேளாண் அமைச்சகத்தில் ஒரு முக்கிய பதவியைப் பெற்றார். ஒரு சுயசரிதை கட்டுரையில், இட்டாலோ கால்வினோ தனது தந்தை "அவரது இளமையில் ஒரு அரசின்மைவாதியாகவும், க்ரோபோட்கினைப் பின்பற்றுபவராகவும் இருந்தார். பின்னர் சோசலிச சீர்திருத்தவாதி"யாக இருந்தார் என்று விளக்கினார். [3] 1917 ஆம் ஆண்டில் மரியோ அறிவியல் பரிசோதனைகளை நடத்த கியூபாவிற்கு புறப்பட்டார்.

கால்வினோவின் தாயார், கியுலியானா லூஜியா எவெலினா "ஈவா" மாமேலி ஒரு தாவரவியலாளர் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் ஆவார். [4] சர்டினியாவில் உள்ள சஸ்சாரியை பூர்வீகமாகக் கொண்டவர். அவரது கணவரை விட 11 வயது இளையவர். அவர் பாவியா பல்கலைக்கழகத்தில் இளநிலை விரிவுரையாளராக இருந்தபோது திருமணம் செய்து கொண்டார். [5]

ஆரம்ப கால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

1925 இல், கால்வினோ பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குளாக, குடும்பம் இத்தாலிக்குத் திரும்பி இலிகுரியா கடற்கரையில் சான்ரெமோ நகரில் நிரந்தரமாக குடியேறியது. புகழ்பெற்ற புவியியலாளர் ஆன கால்வினோவின் தம்பி ஃப்ளோரியானோ 1927 இல் பிறந்தார்.

இவரின் பெற்றோரின் விடுதலைக் கட்டுநர் நம்பிக்கைகள் அரசின்மை, மார்க்சியம் ஆகியவற்றின் கூறுகளைக் கொண்ட குடியரசுவாதம் ஆகியவற்றை அங்கியது. [6] அவர்கள் ஆளும் தேசிய பாசிசக் கட்சியின் மீது தீவிர வெறுப்பு கொண்ட தீவிர சுதந்திர சிந்தனையாளர்களாக இருந்தனர். ஈவா மற்றும் மரியோ ஆகியோர் தங்கள் மகன்களுக்கு கத்தோலிக்க சமயம் சார்ந்த அல்லது வேறு எந்த சமயம் சார்ந்த கல்வியையும் அளிக்க மறுத்துவிட்டனர். [7] இட்டாலோ ஆங்கில மழலையர் பள்ளியான செயின்ட் ஜார்ஜ் கல்லூரியில் பயின்றார், அதைத் தொடர்ந்து வால்டென்சியர்களால் நடத்தப்படும் புராட்டஸ்டன்ட் ஆரம்ப தனியார் பள்ளியில் பயின்றார். பாரம்பரிய உயர்நிலைப் பள்ளி பாடத்திட்டத்துடன் கூடிய இவரது இடைநிலைப் பள்ளிப் படிப்பு, அரசு நடத்தும் லைசியோ ஜியான் டொமினிகோ காசினியில் முடிக்கப்பட்டது. அங்கு இவரது பெற்றோரின் வேண்டுகோளின் பேரில், சமய வகுப்புகளில் இருந்து இவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

இரண்டாம் உலக போர்

[தொகு]

1941 ஆம் ஆண்டில், கால்வினோ டுரின் பல்கலைக் கழகத்தில் பயில இணைந்தார் இவருடைய தந்தை வேளாண்மையில் பாடங்களைக் கற்பித்த வேளாண் பீடத்தைத் தன் மகனுக்காக தேர்ந்தெடுத்தார். தனது குடும்பத்தை மகிழ்விப்பதற்காக தனது இலக்கிய லட்சியங்களை மறைத்து, விருப்பமின்றி கல்லூரியில் சேர்ந்தார். முதல் ஆண்டில் நான்கு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். என்றாலும் இரண்டாம் உலகப்போரால் இவரது கல்வி தடைகளை எதிர்கொண்டது. எலியோ விட்டோரினி, எயுஜேனியோ மொண்டாலே, சிசேர் பாவேஸ், ஜோஹன் ஹூயிங்கா, பிசாகேன் ஆகியோரின் பாசிச எதிர்ப்பு படைப்புகளையும், இயற்பியல் பற்றி மேக்ஸ் பிளாங்க், வெர்னர் ஐசன்பர்க், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆகியோரின் படைப்புகளையும் படித்தார். [8] நாடக ஆசிரியராக வேண்டும் என்பதே கால்வினோவின் உண்மையான ஆசையாக இருந்தது. யூஜெனியோ ஸ்கல்ஃபாரிக்கு இவர் எழுதிய கடிதங்கள் இத்தாலிய மற்றும் வெளிநாட்டு நாடகங்களைப் பற்றிய குறிப்புகளும், எதிர்கால நாடகத் திட்டங்களின் கதைக்களங்களும், கதாபாத்திரங்களைக் கொண்டதாக நிரம்பி வழிந்தன. லூய்கி பிரண்டெல்லோ, கேப்ரியல் டி'அனுன்சியோ, சிசரே விகோ லோடோவிசி, யூகோ பெட்டி, யூஜின் ஓ'நீல், தோர்ன்டன் வைல்டர் ஆகியோரை கால்வினோ தனது உத்வேகத்தின் ஆதாரங்களாகக் குறிப்பிட்ட முக்கிய எழுத்தாளர்கள் ஆவர்.

கால்வினோ 1943 இல் புளோரன்ஸ் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர் வேளண்மையில் மேலும் மூன்று தேர்வுகளில் தடுமாற்றத்துடன் தேர்ச்சி பெற்றார். ஆண்டின் இறுதியில், செருமானியர்கள் லிகுரியாவை ஆக்கிரமித்து, வடக்கு இத்தாலியில் பெனிட்டோ முசோலினியின் கைப்பாவையான சாலோ குடியரசை அமைப்பதில் வெற்றி பெற்றனர். அப்போது இருபது வயதான, கால்வினோ கட்டாய இராணுவ சேவையில் இருந்து தப்பிப்பதற்காக தலைமறைவானார். பரந்த அளவில் தீவிரமாகப் படித்த இவர், அனைத்து குழுக்களையும் விட, கம்யூனிஸ்டுகள் "மிகவும் உறுதியான அரசியல் கொள்கையுடன்" சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டவர்கள் என்று அரசியல் ரீதியாக கருதினார். [9]

1944 வசந்த காலத்தில், இவரின் தாய் ஈவா தனது மகன்களை "இயற்கை நீதி மற்றும் குடும்ப நற்பண்புகள்" என்ற பெயரிலான இத்தாலிய எதிர்ப்பு இயக்கத்தில் சேர ஊக்குவித்தார். [10] "சாண்டியாகோ" என்ற பெயரில் கால்வினோ கரிபால்டி பிரிகேட்ஸ் என்ற இரகசிய கம்யூனிசக் குழுவில் இணைந்தார். 1945 இல் நாஜிகள் வெற்றிகொள்ளப்படுவரை இத்தாலிய எதிர்ப்புப் படையில் சேர்ந்து இருபது மாதங்கள் போரிட்டார். கட்டாய ஆள் சேர்ப்பைத் தவிர்த்ததற்காக காவ்வினோவின் பெற்றோர் நீண்ட காலம் நாசிகளால் பிணைக் கைதிகளாக ஆக்கப்பட்டனர். கால்வினோ தனது தாயின் உறுதியைப் பற்றி எழுதினார், "அவர் உறுதிக்கும், தைரியத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு... சுத்ஸ்டாப்பெல் மற்றும் பாசிச போராளிகளுக்கு முன்பாக கண்ணியத்துடனும் உறுதியுடனும் நடந்து கொண்டார், மேலும் அவர் பிணைக் கைதியாக நீண்ட காலமாக காவலில் இருந்தார், கருஞ்சேனை மூன்று முறை என் தந்தையை அவரது கண் முன்னாள் சுடுவது போல் அச்சுறுத்தினார். தாய்மார்கள் கலந்து கொள்ளும் வரலாற்று நிகழ்வுகள் மகத்துவத்தையும் வெல்ல முடியாத தன்மையையும் பெறுகின்றன". [10]

துரின் மற்றும் கம்யூனிசம்

[தொகு]

கால்வினோ 1945 இல் துரினில் குடியேறினார். [11] பல்கலைக்கழகத்திற்குத் படிக்கத் திரும்பிய இவர், வேளாண் படிப்பைக் கைவிட்டு, கலைத் துறைப் படிப்பைப் தேர்ந்தெடுத்தார். ஒரு ஆண்டு கழித்து, இவர் இலக்கிய உலகில் எலியோ விட்டோரினியால் அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் தனது சிறுகதையான "அண்டடோ அல் கமாண்டோ" (1945; "தலைமையகத்திற்குச் சென்றார்") வார இதழான Il பாலிடெக்னிகோவில் வெளியிட்டார். [12] இவரது போர் அனுபவங்களே துவக்கத்தில் இவரது கதைகள், புதினங்களுக்கு மூலப்பொருளாக இருந்ததாக இருந்தது மட்டுமல்லாமல் கம்யூனிச நோக்கத்திற்கான அவரது அர்ப்பணிப்பை ஆழப்படுத்தியது. பாகுபாடான போராட்டமான குடிமக்களின் வாழ்க்கையைப் பார்த்து, அவர் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக உறுதியாக செயல்பட்டார். விளாடிமிர் லெனினின் அரசும் புரட்சியும் நூலைப் படித்த பிறகு, இவர் போருக்குப் பிந்தைய அரசியல் வாழ்க்கையில் மூழ்கினார், முக்கியமாக துரினில் உள்ள தொழிலாளர் இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். [13]

1947 ஆம் ஆண்டில், இவர் ஜோசப் கொன்ராட் பற்றிய ஆய்வு செய்து முதுகலை பட்டம் பெற்றார். ஓய்வு நேரத்தில் சிறுகதைகளை எழுதினார். மேலும் கியுலியோ ஐனாடி நடத்திய ஈனாடி பதிப்பகத்தின் விளம்பரத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு கொஞ்ச காலமே பணியில் இருந்தாலும், அதனால் சிசேர் பாவேஸ், நடாலியா கின்ஸ்பர்க், நோர்பெர்டோ பாபியோ போன்ற பல இடதுசாரி அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்களுடன் தொடர்பு உண்டானது. பின்னர் அவர் ஈனாடியை விட்டு வெளியேறி அதிகாரப்பூர்வ கம்யூனிச நாளிதழான எல்'யூனிட்டா மற்றும் புதிதாகத் தோற்றுவிக்கபட்ட கம்யூனிச அரசியல் இதழான ரினாசிட்டாவில் பத்திரிகையாளராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில், பாவேஸ் மற்றும் கவிஞர் அல்போன்சோ கட்டோ ஆகியோர் ஆகியோர் கால்வினோவின் நெருங்கிய நண்பர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருந்தனர். [14]

பாவேசின் மதிப்புமிக்க ஆலோசனைகளுடன் எழுதப்பட்ட அவரது முதல் புதினமான இல் சென்டியோரோ டெய் நிடி டி ராக்னோ (சிலந்திகளின் கூடுக்கான பாதை) 1947 இல் வெளியிடப்பட்டு பிரீமியோ ரிச்சியோன் விருதைப் பெற்றது. [15] 5000 பிரதிகள் விற்பனையாகி, போருக்குப் பிந்தைய இத்தாலியில் ஒரு ஆச்சரியமான வெற்றியைப் பெற்றது. 1948 இல், இவரது அன்புக்கு உரியவராக இருந்த இலக்கியவாதிகளில் ஒருவராக இருந்த ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயை நேர்காணல் செய்வதற்காக, நடாலியா கின்ஸ்பர்க்குடன் ஸ்ட்ரெசாவில் உள்ள அவரது வீட்டிற்கு பயணம் மேற்கொண்டு நேர்காணல் செய்தார்.

Ultimo viene il corvo ( The Crow Comes Last ), என்னும் இவரது போர்க்கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளின் தொகுப்பு, 1949 இல் வெளியிடப்பட்டது. இந்தத் தொகுதி வரவேற்பைப் பெற்ற போதிலும், இரண்டாவது புதினத்தை இயற்ற முடிதாததால் கால்வினோ பெருமளவில் கவலைப்பட்டார். இவர் 1950 இல் ஈனாடிக்குத் திரும்பினார். இவர் இறுதியில் பதிப்பக ஆலோசகரானார், இது இவரது எழுத்துத் திறமையை மேம்படுத்திக்கொள்ளவும், புதிய எழுத்தாளர்களைக் கண்டறியவும், "நூல்களின் வாசிக்கவும்" வளரவும் ஏது செய்தது. [16] 1951 இன் பிற்பகுதியில், பொதுவுடமைக் கட்சியில் முன்னேறம் காண, இவர் சோவியத் ஒன்றியத்தில் இரண்டு மாதங்கள் l'Unità இதழின் செய்தியாளராக இருந்தார். மாஸ்கோவில் இருந்தபோது, அக்டோபர் 25 அன்று தன் தந்தையின் மரணச் செய்தியை அறிந்தார். இந்தமுறை வந்தபோது இவரது கட்டுரைகள், கடிதங்கள் போன்றவை 1952 இல் வெளியிடப்பட்டன, இது பத்திரிகைக்கான செயிண்ட்-வின்சென்ட் பரிசைப் பெற்றது.

ஏழு ஆண்டுக் காலப்பகுதியில், கால்வினோ மூன்று யதார்த்தவாத புதினங்களை எழுதினார், தி ஒயிட் ஸ்கூனர் (1947-1949), யூத் இன் டுரின் (1950-1951), தி குயின்ஸ் நெக்லஸ் (1952-54), ஆனால் அனைத்தும் குறைபாடுடையதாகக் கருதப்பட்டன. [17] புனைகதையாக இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலிய எதிர்ப்பில் இவரது அனுபவத்துடன் குறிக்கப்பட்டன, அற்புதமான கதைகளை எழுதியவர் என்ற பாராட்டு 1950 களில் வந்தது. [18]

1952 ஆம் ஆண்டில் கால்வினோ ஜார்ஜியோ பஸ்சானியுடன் இணைந்து ரோமில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தின் பிரபலமான பெயரையே பெயராக இடப்பட்ட பத்திரிகையான போட்டேகே ஆஸ்கூருக்கு எழுதினார். இவர் மார்க்சிய வார இதழான Il Contemporaneo இல் பணியாற்றினார்.

1955 முதல் 1958 வரை கால்வினோ திருமணமான, வயதான பெண்ணான இத்தாலிய நடிகை எல்சா டி ஜியோர்ஜியுடன் உறவு வைத்திருந்தார். கால்வினோ அவருக்கு எழுதிய நூற்றுக்கணக்கான காதல் கடிதங்களின் பகுதிகள் 2004 இல் கொரியர் டெல்லா செராவில் வெளியானது, சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. [19]

கம்யூனிசத்திற்குப் பிறகு

[தொகு]

1957 இல், அங்கேரி மீதான 1956 சோவியத் படையெடுப்பால் ஏமாற்றமடைந்த கால்வினோ இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு விலகினார். ஆகத்து ஏழாம் நாள் L'Unità இதழில் வெளியிடப்பட்ட இவரது ராஜினாமா கடிதத்தில், உலக கம்யூனிசத்தின் "ஜனநாயகக் கண்ணோட்டங்களில் நம்பிக்கையை" உறுதிப்படுத்தும் அதே வேளையில், அவர் தனது கருத்து வேறுபாட்டிற்கான காரணத்தை விளக்கினார் (அங்கேரியப் புரட்சியாளர்களை வன்முறையால் ஒடுக்கியது மற்றும் ஜோசப் ஸ்டாலினின் குற்றங்களை வெளிப்படுத்துதல்). [20] இவர் தீவிர அரசியலில் இருந்து விலகினாலும் வேறு கட்சியில் சேரவில்லை. [21] Città aperta, Tempo presente, Passato e presente போன்ற இதழ்களில் எழுதத் துவங்கினார். 1959 இல் விட்டோரினியுடன், நவீன தொழில்துறை யுகத்தில் இலக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட பண்பாட்டு இதழான 'இல் மெனபோவின் இணை ஆசிரியரானார், அதில் 1966 வரை பதவி வகித்தார் [22]

கம்யூனிச கருத்துக்களைக் கொண்ட வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்காவில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், கால்வினோ அமெரிக்காவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். அங்கு இவர் 1959 முதல் 1960 வரை ஆறு மாதங்கள் தங்கியிருந்தார். இந்த அமெரிக்க விஜயத்தை விவரித்து Einaudi க்கு இவர் எழுதிய கடிதங்கள் முதன்முதலில் 2003 இல் ஹெர்மிட் இன் பாரிசில் "அமெரிக்கன் டைரி 1959-1960" என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

1962 இல் கால்வினோ அர்ஜென்டினா மொழிபெயர்ப்பாளரான எஸ்தர் ஜூடித் சிங்கரை ("சிச்சிட்டா") சந்தித்தார். 1964 இல் அவானாவில் அவரை மணந்துகொண்டார். ஒரு பயணத்தின் போது அவர் தனது பிறந்த இடத்திற்குச் சென்று சே குவேராவை அறிமுகம் கொண்டார். 15 அக்டோபர் 1967 இல், குவேரா இறந்த சில நாட்களுக்குப் பிறகு, கால்வினோ அவருக்கு ஒரு அஞ்சலி எழுதினார், அது 1968 இல் கியூபாவிலும் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலியிலும் வெளியிடப்பட்டது. [23] இவரும் இவரது மனைவியும் மான்டே பிரையன்சோ வழியாக உரோமில் குடியேறினர், அங்கு இவர்களின் மகள் ஜியோவானா 1965 இல் பிறந்தார். மீண்டும் Einaudi இதழில் பணிபுரிந்தார், கால்வினோ தனது " காஸ்மிகாமிக்ஸ் " சிலவற்றை Il Caffè என்ற இலக்கிய இதழில் வெளியிடத் தொடங்கினார்.

தமிழில் மொழிபெயர்ப்புகள்

[தொகு]

கால்வினோவின் சிறுகதைகளை தமிழில் முதன்முதலில் கவிஞர் பிரம்மராஜன் மொழிபெயர்த்து 2003 இல் தொகுப்பாக வெளியிட்டார்.[24] மேலும் அவர் கால்வினோவின் முதன்மையான கட்டுரையான செவ்வியல் படைப்புகளை ஏன் வாசிக்கவேண்டும் என்னும் கட்டுரையையும் மொழிபெயர்தார். இவரின் புலப்படாத நகரங்கள், குளிர்கால இரவில் ஒரு பயணி ஆகிய இரு படைப்புகளை மொழிபெயர்ப்பாளர் சமயவேல் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.[25]

மேற்கோள்கள்

[தொகு]
  1. McLaughlin, Italo Calvino, xii.
  2. Calvino, 'Objective Biographical Notice', Hermit in Paris, 160.
  3. Calvino, 'Political Autobiography of a Young Man', Hermit in Paris, 132.
  4. Paola Govoni, "The Making of Italo Calvino: Women and Men in the ‘Two Cultures’ Home Laboratory" in Writing about Lives in Science: (Auto)Biography, Gender, and Genre, eds. P. Govoni and Z.A. Franceschi, Goettingen: Vandenhoeck & Ruprecht/V&R Unipress, 2014, pp. 187–221. Retrieved 4 February 2015
  5. Calvino, "Political Autobiography of a Young Man", Hermit in Paris, 132.
  6. McLaughlin, xii. Calvino defined his family's traditions as "a humanitarian Socialism, and before that Mazzinianism". Cf. Calvino, 'Behind the Success' in Hermit in Paris, 223.
  7. Weiss, Understanding Italo Calvino, 3.
  8. Calvino, 'Political Autobiography of a Young Man', Hermit in Paris, 140.
  9. Calvino recalled this sudden, forced transformation of a dreamy adolescent into a partisan soldier as one bounded by logic since "the logic of the Resistance was the very logic of our urge towards life". Calvino, 'Political Autobiography of a Young Man', Hermit in Paris, 146.
  10. 10.0 10.1 Calvino, 'Political Autobiography of a Young Man', Hermit in Paris, 142.
  11. The decision was influenced by the firmly anti-Fascist stance of Turin during Mussolini's years in power. Cf. Calvino, 'Behind the Success' in Hermit in Paris, 225.
  12. Il Politecnico was founded by Elio Vittorini, a novelist and the leading leftist intellectual of postwar Italy, who saw it as a means to restore Italy's diminished standing within the European cultural mainstream. Cf. Weiss, Understanding Italo Calvino, 3.
  13. Calvino, 'Political Autobiography of a Young Man', Hermit in Paris, 143.
  14. Calvino, 'Behind the Success' in Hermit in Paris, 224.
  15. Critic Martin McLaughlin points out that the novel failed to win the more prestigious Premio Mondadori. McLaughlin, xiii.
  16. Weiss, Understanding Italo Calvino, 4.
  17. Of the three manuscripts, only Youth in Turin was published in the review Officina in 1957.
  18. Caves, R. W. (2004). Encyclopedia of the City. Routledge. p. 63.
  19. Italian novelist's love letters turn political[தொடர்பிழந்த இணைப்பு], International Herald Tribune, 20 August 2004
  20. Cf. Barenghi and Bruno, "Cronologia" in Romanzi e racconti di Italo Calvino, LXXIV; and Calvino, "The Summer of '56" in Hermit in Paris, 200
  21. "For some years now I have stopped being a member of the Communist party, and I have not joined any other party." "Political Autobiography of a Young Man" in Hermit in Paris, 154
  22. McLaughlin, Italo Calvino, 51
  23. "Che Guevara".
  24. "இரண்டாயிரத்துக்குப் பிறகு நவீனக் கவிதைகள் பலவீனமாகிவருகின்றன!- பிரம்மராஜன் பேட்டி". 2020-08-30. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  25. "தொழில்நுட்ப மறைஞானி". 2023-10-15. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)