உள்ளடக்கத்துக்குச் செல்

அழிவாய்ப்பு இனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில் அழிவாய்ப்பு இனம் (Vulnerable species) எனக் குறிப்பிடப்படும் இனமானது இனத்திற்கான அச்சுறுத்தல் நிலைகள் குறைந்து, அவ்வினத்தின் இனப்பெருக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலன்றி, வெகு விரைவில் 'அருகிய இனமாக' மாற்றமடையக் கூடிய இனமாகும். காப்பு நிலையில் இது அழிவாய்ப்பு இனம் (VU - Vulnerable) எனக் குறிப்பிடப்படுகின்றது. வாழிடப் பிரதேசத்தில் அழிவு ஏற்பட்டு, அவை தமது வாழிடத்தை இழத்தலே பொதுவாக அவற்றிற்கான அழிவாய்ப்பை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது.[1][2]

அழிவாய்ப்பில் உள்ள தவளை இனம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. IUCN (2012). "IUCN Red List version 2012.2: Table 2: Changes in numbers of species in the threatened categories (CR, EX, VU) from 1996 to 2012 (IUCN Red List version 2012.2) for the major taxonomic groups on the Red List" (PDF). Archived (PDF) from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2012-12-31.
  2. "IUCN 2008 Red List - Categories and Criteria (version 3.1)". www.iucnredlist.org. Archived from the original on 2008-10-08.