உள்ளடக்கத்துக்குச் செல்

அலாவுதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலாவுதீனும் அற்புத விளக்கும்
நாட்டுப்புறக் கதை
பெயர்: அலாவுதீனும் அற்புத விளக்கும்
தகவல்
பகுதி: மத்திய கிழக்கு
Published in: ஆயிரத்தொரு இரவுகள்
அலாவுதீன் ஓவியம்

அலாவுதீன் (Aladdin, அரபு மொழி: علاء الدين‎), என்பது மத்திய கிழக்கு நாடுகளின் ஒரு நாட்டுப்புறக் கதை ஆகும். 'ஆயிரத்தொரு இரவுகள்' என்ற பெருங்கதையின் ஒரு பகுதி ஆகும். உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர், சிறுமியர்களும், பெரியவர்களும், படித்து மகிழக் கூடிய கதைகள் 'அலாவுதீனும் அற்புத விளக்கும்', 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்', 'சிந்துபாத்தும் கடல் பயணமும்' ஆகிய புகழ்பெற்ற கதைகள். தந்திரம், சாகசம், புத்திக்கூர்மை, விடாமுயற்சி, அஞ்சாமை, வீரதீரம் ஆகிய உணர்வுகள் கதைகள் மூலம் கூறப்படுகின்றன. சாரியர் என்னும் மன்னனுக்கு மந்திரியின் மகன் சரஜாத் ஆயிரத்தோரு இரவுகளில் கூறிய அரபுக் கதைகள் என்பது உலகம் முழுதும் பிரபலான கதைகள். அந்த அரபுக் கதைகளில் ஏராளமான கதைகள் இருப்பினும் ஒரு அற்புதமான கதை ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ என்னும் கதையாகும்.[1]

கதைச்சுருக்கம்

[தொகு]
அலாவுதீன் ஒருகுகையில் தள்ளப்படுதல்

இக்கதை பல்வேறு வடிவங்களில் சிறு மாறுதல்களுடன் பல வகைகளில் கூறப்படுகிறது. அதன் ஒரு வடிவத்தின் சுருக்கத்தை இங்கே காணலாம்.சீனாவில் ஒரு மந்திரவாதி, ஒரு குகையில் இருக்கும் மந்திர விளக்கை எடுக்க முயல்கிறான். இந்த வேலைக்கு அலாவுதீனை அனுப்புகிறார் அவனது சித்தப்பா. குகைக்கு செல்லும் முன் ஒரு மந்திர மோதிரத்தை அணிகிறான். குகையில் சென்றபின், மோதிரத்தை தேய்க்க ஒரு பூதம் வருகிறது. அது மந்திர விளக்கை அவனுக்குத் தருகிறது. பின் அவனை அவன் வீட்டுக்கு அனுப்புகிறது. அவனது அம்மா, அந்த விளக்கைத் தேய்க்கும் போது, பூதம் வெளிப்பட்டு, அவர்களுக்குத் தேவையானவற்றைத் தருகிறது. அவர்கள் விரைவில் பெரும் பணக்காரர் ஆகி, நாட்டின் இளவரசியை மணம் புரிகிறான் அலாவுதீன்.அவன் வளர்ச்சியைப் பொறுக்காத மந்திரவாதி, ஒரு பணிப்பெண் மூலம், பழைய விளக்குக்கு புது விளக்கு தரும் விற்பனையாளராக அவன் வீடு சென்று, மந்திர விளக்கைக் கவர்கிறான். ஆயினும் மோதிரத்தில் உள்ள பூதம் மூலம், விளக்கை மீண்டும் பெறுகிறான் அலாவுதீன்.முக்கியமான கதாபாத்திரங்கள் – அலாவுதீன், ராஜா, இளவரசி, அலாவுதீன் அம்மா, மந்திரவாதி.

ஆயிரத்தொரு இரவுகள்

[தொகு]

(One Thousand and One Nights அரபி: كتاب ألف ليلة وليلة‎) என்பது மையக்கிழக்கு மற்றும் தெற்காசியாவை சேர்ந்த எழுத்தாளர்களினதும், மொழிபெயர்ப்பாளர்களினதும் கதைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட ஒரு நூலாகும். இந்நூலிலுள்ள கதைகளின் மூலங்கள் பண்டைய அரேபியா, யேமன், பண்டைக்கால இந்திய இலக்கியங்கள், பாரசீக இலக்கியங்கள், பழங்கால எகிப்திய இலக்கியங்கள், மெசொப்பொத்தேமியத் தொன்மங்கள், பண்டைச் சிரியா, சின்ன ஆசியா, கலீபாக்கள் காலத்து மத்தியகால அராபிய நாட்டார் கதைகள் என்பவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை. இவை இசுலாமிய பொற்கால நேரத்தில் அரபு மொழியில் தொகுக்கப்பட்டன. இந்நூலின் எல்லாப் பதிப்புக்களிலும் உள்ள பொதுவான அம்சம், அரசர் சாரியார் மற்றும் அவர் மனைவி செகர்சதாவினதுமான முதன்மைக் கதையாகும். ஏனைய கதைகள் இம் முதன்மைக் கதையில் இருந்தே நகர்கின்றன. சில கதைகள் தனிக் கதைகளாகவும் வேறு சில கதைகள் பிற கதைகளில் கதைக்குள் கதையாகவும் அமைக்கப்பட்டுள்ளன. சில பதிப்புக்கள் 1001 இரவுகளை உள்ளடக்கியிருந்தாலும் வேறு சில பதிப்புக்களில் சில நூறு இரவுகள் மட்டுமே காணப்படுகின்றன.

 மூலங்கள்

[தொகு]

அரேபியா, சீனா ஆகிய இடங்களில் இக்கதை நடைபெறுவதாக, பல வடிவங்கள் உள்ளன. மார்ச் 25, 1709 ல் எழுதப்பட்ட ஒரு நாட்குறிப்பு இக்கதையின் பல மொழிபெயர்ப்புகள் பற்றி கூறுகிறது.

மாற்றங்கள்

[தொகு]

ஆயிரத்து ஒரு அரபுக் கதைகளில் அரேபிய வடிவிலும், சீனாவின் பல இடங்களில் சீன நாட்டுப்புற வடிவிலும், உலகின் பல்வேறு இடங்களில், பல்வேறு மாற்றங்களுடன், இக்கதை சொல்லப்பட்டு வருகிறது.

புத்தகங்கள்

[தொகு]
  • வால்ட் டிஸ்னி நிறுவனம் 1962ல் டோனால்டும் அலாவுதீன் குகையும் என்ற சிறுவர் கதைப்புத்தகத்தை வெளியிட்டது. 
  • 1966ல் வெளியான, மாயாஜாலக்கதைகள், 1971ல் வெளியான மந்திரத்தின் தேர்வு ஆகிய நூல்களில் இக்கதை இடம் பெற்றுள்ளது.
  • இந்தியாவிலும் பல்வேறு மொழிகளில் விரிவான கதை, படக்கதை, சிறுவர் நூல் போன்ற வடிவங்களில் பல்வேறு நூல்களாக வெளியிடப்பட்டு வருகிறது.

திரைப்படங்கள்

[தொகு]
  • அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற பெயரில் 1917 இல் ஊமைத் திரைப்படமாக வெளியானது.
  • 1926ல் அலாவுதீனின் கதையில் ஒரு வடிவமாக, அசையும் திரைப்படம் வெளிவந்தது.
  • பாப்பை மாலுமியின் கதையாக 1939ல் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற அசையும் படம் வெளியானது
  • 1959 ல் 1001 அரபிய இரவுக் கதைகள் வெளியானது
  • அலாவுதீனும் அற்புத விளக்கும் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரராவ், டி. எஸ். பாலையா மற்றும் பலர் நடித்திருந்தனர். இது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியானது.
  • அல்லாவுதீனும் அற்புத விளக்கும் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
  • 1992 ல் வால்ட் டிஸ்னி, அலாவுதீன் என்ற படத்தை வெளியிட்டது.
  • 1940 ல் பாக்தாதின் திருடன் வெளியானது.

தொலைக்காட்சி

[தொகு]
  • 1986 முதலே உலகின் பல நாடுகளிலும் அலாவுதீன் கதை தொலைக்காட்சித் தொடர் வடிவில் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டு வருகிறது.

படக்கதை

[தொகு]
  • மேகி என்ற ஜப்பானியப் படக்கதை, அலாவுதீனை முக்கிய கதைப் பாத்திரமாக வைத்துள்ளது. மேலும் ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகளின் பல்வேறு கதை மாந்தர்களையும் கொண்டுள்ளது.

விளையாட்டுகள்

[தொகு]
  • 1993ல் செகா ஜெனிசிஸ் என்ற விளையாட்டு நிறுவனம் டிஸ்னியுடன் இணைந்து ஒரு விளையாட்டை வெளியிட்டது.
  • 2010 ல் அனுமன் இன்டராக்கிவ் நிறுவனம், கணினி, மேக் கருவிகளில் விளையாடும் ஒரு விளையாட்டை வெளியிட்டது.[2]

காட்சியகம்

[தொகு]

வழக்குகள்

[தொகு]

ஆயிரத்து ஓர் இரவுகள் என்ற  அரபுக் கதைகளின் சில பகுதிகள் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என எகிப்தின் வழக்குரைஞர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கதைகளில் வரும் கவர்ச்சியான வர்ணனைகள் ஆபாசமாக உள்ளதாக இஸ்லாமிய சட்டத்தரணிகள் சிலர் கூறுகின்றனர். ஆதலால் இந்தப் புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். 'கைவிலங்குகள் அற்ற வழக்குரைஞர்கள்' என்ற பெயர் கொண்ட அமைப்பைச் சார்ந்த அவர்கள் ஆயிரத்தோரு இரவுகள் கதைகளில் வரும் இப்படியான வர்ணனைகள் மனிதன் தவறான பாதையில் செல்லத் தூண்டுவதாகக் வாதிடுகின்றனர்.[3]

உசாத்துணைகள்

[தொகு]