உள்ளடக்கத்துக்குச் செல்

அரி வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரி வம்சம் (Harivamsha) சமசுகிருதம் (Harivaṃśa, हरिवंश), எனும் பண்டைய பிராகிருத மொழியில் எழுதிய நூல், 16,374 செய்யுட்களுடன் கூடியது. இந்நூல் ஹரி எனப்படும் விஷ்ணுவின் எட்டாவது அவதாரத்தை விளக்கும் புராண நூலாகும். ஹரி வம்சம், மகாபாரதத்தின் இணைப்பு நூலாக கருதப்படுகிறது.[1] இந்நூலை இயற்றியது வேத வியாசர் ஆவார். ஹரி வம்சம் ஆதி பருவம், விஷ்ணு பருவம் மற்றும் பவிஷ்ய பருவம் என மூன்று பருவங்களைக் கொண்டது.

முதலிரண்டு பருவங்கள் ஹரியின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரை குறித்து அதிக செய்திகள் கொண்டது. இந்த முதலிரண்டு நூல்கள் வைணவர்களால் அதிகம் போற்றப்படுகிறது.[2][3]

ஆதி பருவத்தில், கிருஷ்ணரின் பிறப்பு, இளமையை விளக்குகிறது. விஷ்ணு பருவம், மகாபாரதத்தில் பாண்டவர்களுடனான தொடர்புகள் விளக்குவதுடன், பிரஸ்தானத்திரயங்களில் ஒன்றான பகவத் கீதை உபதேசம் அருச்சுனனுக்கு அருளப்படும் செய்திகள் உள்ளது.[2] பவிஷ்ய பருவம், கலி யுகம் தொடர்பான செய்திகள் விளக்கப்படுதுடன்,[4] உத்தவ கீதை உபதேசம் உத்தவருக்கு செய்திகள் அடங்கியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Mahabharata in Sanskrit: Book I: Chapter 2 in sacred-texts.com website
  2. 2.0 2.1 Maurice Winternitz (1981), History of Indian Literature, Vol. 1, Delhi, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0836408010, pages 426-431
  3. Edwin Francis Bryant (2007), Krishna: A Sourcebook, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195148923, Chapters 4-21
  4. Maurice Winternitz (1981), History of Indian Literature, Vol. 1, Delhi, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0836408010, pages 432-435

வெளி இணைப்புகtள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அரி வம்சம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.