உள்ளடக்கத்துக்குச் செல்

மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர்
இரண்டாவது இந்திய மக்களவைத் தலைவர்
பதவியில்
மார்ச் 8, 1956 – ஏப்ரல் 16, 1962
Deputyசர்தார் ஹுக்கம் சிங்
முன்னையவர்கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர்
பின்னவர்சர்தார் ஹுக்கம் சிங்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், திருப்பதி மக்களவைத் தொகுதி
பதவியில்
1951–1962
முன்னையவர்இல்லை
பின்னவர்சி. தாஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபிப்பிரவரி 4, 1891
திருச்சானூர், சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
இறப்புமார்ச்சு 19, 1978(1978-03-19) (அகவை 87)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சூடம்மாள்
தொழில்அரசியல்வாதி

எம். அனந்தசயனம் அய்யங்கர் அல்லது எம். ஏ. அய்யங்கார் (Madabhushi Ananthasayanam Ayyangar அல்லது M. A. Ayyangar; 4 பிப்ரவரி 1891 - 19 மார்ச் 1978) இந்திய நாடாளுமன்றத்தில் முதல் துணை சபாநாயகராகவும், பின்னர் சபாநாயகராகவும் இருந்தார். பின்பு அவர் பீகாரின் ஆளுநராக இருந்தார்.

பிறப்பும் குடும்பமும்

[தொகு]

அவர் சென்னை மாகாணத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருச்சானூர் கிராமத்தில் 4 பெப்ரவரி 1891 அன்று பிறந்தார். அவரது தந்தை எம். வேங்கடவராதாச்சாரியார் ஆவார். அய்யங்கார் 1919 ஆம் ஆண்டில் சூடம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்; அவருக்கு நான்கு மகன்கள் மற்றும் எட்டு மகள்கள் இருந்தனர்.[1]

பணி

[தொகு]

அவர் கணித ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் 1915 -1950 க்கு இடையில் ஒரு வழக்கறிஞரானார். மகாத்மா காந்தியினால் ஈர்க்கப்பட்ட அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்; இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் 1934 ஆம் ஆண்டு மத்திய சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பதியிலிருந்து முதல் மக்களவைக்கும், 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டு சித்தூர் தொகுதிகளிலிருந்து இரண்டாவது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948 ஆம் ஆண்டு மக்களவையின் துணைச் சபாநாயகராக கணேஷ் வாசுதேவ் மாவ்லாக்கர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 இல் மாவ்லாங்கர் இறந்த பிறகு, இவர் மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் பீகாரின் ஆளுநராகப் பணியாற்றினார்.

சிறப்பு

[தொகு]

இவருடைய வெண்கல சிலையானது 2007 இல் இவரது சொந்த ஊரான திருப்பதியில் நிறுவப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Members bioprofile on Lok Sabha website". தேசியத் தகவல் மையம் (இந்தியா), New Delhi and மக்களவை (இந்தியா). Archived from the original on 30 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "The Hindu : National : Ananthasayanam Ayyangar statue to be unveiled". Archived from the original on 2008-03-25. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.

வெளி இணைப்புகள்

[தொகு]