நாடியாத்

குஜராத் மாநிலத்தின் கேதா மாவட்டத்தின் தலைமையிடம்

நாடியாத் (Nadiad), இந்தியா, குஜராத் மாநிலத்தின் கேதா மாவட்டத்தின் தலைமையிடம் மற்றும் நகராட்சி மன்றமும் ஆகும்.

நாடியாத்
படித்தோர் மிக்க நகரம்
நகரம்
சாந்தாராம் கோயில், தீபாவளி நாளில், ஆண்டு 2008
சாந்தாராம் கோயில், தீபாவளி நாளில், ஆண்டு 2008
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்கேதா மாவட்டம்
அரசு
 • தலைவர்சகாயாபென் படேல்
பரப்பளவு
 • மொத்தம்45.16 km2 (17.44 sq mi)
ஏற்றம்
35 m (115 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,25,132
 • அடர்த்தி5,000/km2 (13,000/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சலக சுட்டு எண்
387 001 மற்றும் 387 002
தொலை பேசி குறியீடு எண்0268
வாகனப் பதிவுGJ-7
இணையதளம்nadiadmunicipality.com

வரலாறு

தொகு

கழைக்கூத்தாடிகள் தங்கியிருந்த காரணத்தினால், இந்நகருக்கு நாடியாத் என்று வழங்கலாயிற்று. நாடியாத் நகரம் ஒன்பதாம் எண்னுக்கு பெயர் பெற்றது. நாடியத் நகரத்தின் ஒன்பது சாலைகள், 9 கிராமங்கள் அல்லது நகரங்களைக் நோக்கிச் செல்கிறது. 9 ஏரிகள் நகரத்தைச் சுற்றி அமைந்துள்ளன. படித்தவர்களின் நகரம் என்ற பெருமை பெற்றது.

இந்நகரத்தை துவக்கத்தில் இசுலாமியர்களும், பின்னர் பரோடாவின் கெய்க்வாட் இந்து மன்னர்களும் ஆண்டனர்.


மக்கள் வகைப்பாடு

தொகு

2011ஆம் ஆண்டு தற்காலிக கணக்கெடுப்பின்படி இந்நகர மக்கட்தொகை 192,799ஆக உள்ளது.[1]. எழுத்தறிவு 95 விழுக்காடாக உள்ளது.

பார்க்க வேண்டிய இடங்கள்

தொகு
  1. சாந்தாராம் கோயில்
  2. மாதா மாய் கோயில்
  3. மாகாளி கோயில்
  4. பைரவர் கோயில்

தொழில்கள்

தொகு

நாடியாத் நகரம் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், துணி ஆலைகள், மர வனிகம் ஆகியவற்றிக்குப் பெயர் பெற்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

தொகு