முகமது நஜிபுல்லா

நஜிபுல்லா (Najibullah, பாஷ்தூ: نجيب الله; பெப்ரவரி, 1947 - செப்டம்பர் 27, 1996) கம்யூனிச ஆப்கானிஸ்தானின் நான்காவதும் கடைசி அதிபராகவும் இருந்தவர். முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் 1996 இல் காபூல் நகரைக் கைப்பற்றிய போது நஜிபுல்லா மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

முகம்மது நஜிபுல்லா அகமதுசாய்
Mohammad Najibullah Ahmadzai
ஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலர்
பதவியில்
4 மே 1986 – 16 ஏப்ரல் 1992
முன்னையவர்பப்ராக் கர்மால்
பின்னவர்கட்சி கலைப்பு
ஆப்கானித்தானின் 2-வது அரசுத்தலைவர்
பதவியில்
30 நவம்பர் 1987 – 16 ஏப்பிரல் 1992
பிரதமர்சுல்தான் அலி கெசுத்மண்டு[1]
முகம்மது அசன் சார்க்[2]
பசால் அக் காலிக்யார்
முன்னையவர்இவரே
பின்னவர்புர்கானுத்தீன் ரப்பானி
புரட்சிப் பேரவையின் தலைவர்
பதவியில்
30 செப்டம்பர் 1987 – 30 நவம்பர் 1987
முன்னையவர்காஜி முகம்மது சம்கானி
பின்னவர்இவரே (அரசுத்தலைவராக)
அரசுப் புலனாய்வுத்துறைப் பணிப்பாளர்
பதவியில்
11 சனவரி 1980 – 21 நவம்பர் 1985
தலைவர்பப்ராக் கர்மால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 ஆகத்து 1947
கார்டெசு, ஆப்கானித்தான் இராச்சியம்
இறப்பு27 செப்டம்பர் 1996(1996-09-27) (அகவை 49)
காபுல், ஆப்கானித்தான்
காரணம் of deathதூக்கு
இளைப்பாறுமிடம்கார்டெசு, ஆப்கானித்தான்
அரசியல் கட்சிஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி
துணைவர்பத்தானா நஜீப்
பிள்ளைகள்முசுக்கா நஜிபுல்லா,
கீலா நஜிபுல்லா[3]
முன்னாள் கல்லூரிகாபுல் பல்கலைக்கழகம்
Military service
பற்றிணைப்புஆப்கானித்தான் ஆப்கானித்தான் குடியரசு (1987-1992)
கிளை/சேவைஆப்கான் தேசிய இராணுவம்
சேவை ஆண்டுகள்1965–1992
தரம்செனரல்
போர்கள்/யுத்தங்கள்

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பாஷ்டன் இனத்தில் பிறந்தவர். காபூல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் மருத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

அரசியலில்

தொகு

1965 இல் நஜிபுல்லா கம்யூனிச ஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்து 1977 இல் அதன் மத்திய குழுவில் உறுப்பினரானார்.

1978 இல் ஆப்கானிஸ்தானில் இவரது கட்சி ஆட்சியைப் பிடித்தது. எனினும் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த பிளவு காரணமாக இவர் ஐரோப்பாவுக்கு நாடுகடத்தப்பட்டார். 1979 இல் நாட்டை சோவியத் ஒன்றியம் முற்றுகையிட்டு கைப்பற்றியதை அடுத்து காபூல் திரும்பினார். 1980 இல் இரகசிய காவற்துறையின் தலைவரானார். இவரது பதவிக்காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பு அவை குற்றஞ்சாட்டியது[4]. 1981 இல் கட்சியின் மத்திய குழுவில் உறுப்பினரானார்.

மே 4, 1986 இல் பப்ராக் கர்மால் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகவே, நஜிபுல்லா பொதுச் செயலாளரானார். கர்மால் நாட்டின் சனாதிபதியாக மேலும் சில காலம் இருந்தாலும், அதிகாரம் முழுக்க நஜிபுல்லாவுக்கு கைமாறியது.

நவம்பர் 1986 இல் நாட்டின் அதிபரானார். அத்துடன் புதிய அரசமைப்புச் சட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். அதன்படி பல-கட்சி அரசியல், பேச்சுச் சுதந்திரம், போன்றவற்றை அறிமுகப்படுத்தப்பட்டது.

இவரது ஆட்சிக் காலத்தில் முஜாஹுதீன் படைகளுக்கெதிராக சோவியத் படைகள் பலத்த தாக்குதலை 1985-86 காலப்பகுதியில் நடத்தியிருந்தது. பனிப்போர் முடிவடைந்ததை அடுத்து 1987 ஜூலை 20 இல் சோவியத் ஒன்றியம் தனது படைகளை வெளியேற்றுவதாக அறிவித்தது.

வீழ்ச்சி

தொகு

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரை அடுத்து, ஏப்ரல் 16, 1992 இல் அதிபர் பதவியில் இருந்து விலகினார். இஸ்லாமியத் தீவிரவாதிகள் நாட்டின் முக்கிய விமானப் படைத்தளத்தையும் சாரிக்கார் நகரையும் கைப்பற்றியிருந்தனர். ஏப்ரல் 17 இல் காபூலில் உள்ள ஐநா அலுவலகத்தில் பாதுகாப்புக் கருதி தங்கியிருந்தார்.

தூக்கிலிடப்படல்

தொகு

1992 முதல் நஜிபுல்லாவின் மனைவியும் மூன்று மகள்களும் நாடுகடந்த நிலையில் புது தில்லியில் வாழ்ந்து வந்தனர். தாலிபான் தீவிரவாதிகள் காபூலைக் கைப்பற்றியதை அடுத்து நஜிபுல்லாவும் அவரது சகோதரரும் மக்கள் முன்னிலையில் செப்டம்பர் 27, 1996 இல் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. National Foreign Assessment Center (1987). Chiefs of State and Cabinet members of foreign governments (in ஆங்கிலம்). Washington, DC: Central Intelligence Agency. p. 1. hdl:2027/uc1.c050186243.
  2. National Foreign Assessment Center (1988). Chiefs of State and Cabinet members of foreign governments (in ஆங்கிலம்). Washington, DC: Central Intelligence Agency. p. 1. hdl:2027/osu.32435024019804.
  3. "Heela Najibullah: From Afghan First Daughter to War Refugee | Voice of America - English".
  4. Christopher M Andrew and Vasili Mitrokhin (2005). The World Was Going Our Way: The KGB and the Battle for the Third World. Basic Books. pp. p.409. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-465-00311-7.

வெளி இணைப்பு

தொகு