வார்ப்புரு பேச்சு:தேவார வைப்புத்தலங்கள்
வணக்கம், தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள் மற்றும் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள் ஆகியவற்றுக்கு அந்தந்த தலங்களைப் பற்றிய பதிவில் உரிய வார்ப்புருக்கள் உள்ளன. கோயிலைத் தேடிப் பார்ப்பது எளிதாக உள்ளது. தேவார வைப்புத்தலங்கள் முழுமையான பதிவாக இல்லாத நிலையில் ஒவ்வொரு தலத்திலும் சென்று தேடுவதை எளிதாக்க புதிய வார்ப்புரு உருவாக்கப்படுகிறது. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:00, 4 சனவரி 2017 (UTC)
தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில்
[தொகு]தற்போது தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில் தற்போது சேர்க்கப்பட்டது. தொடர்ந்து விடுபட்ட கோயில்கள் பதியப்பட்டு, சேர்க்கப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:07, 4 சனவரி 2017 (UTC)
பு.மா.ஜெயசெந்தில்நாதன் நூல்
[தொகு]பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 என்ற நூலில் (பக்கங்கள் 15 முதல் 20 வரை) 147 தலங்கள் வைப்புத்தலங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் ஒப்புநோக்கப்பட்டு, பதிவு பின்னர் மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:15, 4 சனவரி 2017 (UTC)
மேற்கண்ட நூல் அடிப்படையில் தலங்களின் பட்டியல் தற்போது வரிசையாக அமைக்கப்பட்டன. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:11, 5 நவம்பர் 2018 (UTC)
வைப்புத்தலங்கள் பதிவு 147 நிறைவு
[தொகு]தேவார வைப்புத் தலங்கள் 147ஐப் பற்றியும் உரிய இணைப்புகள் தந்து பதிவுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இல்லாத கோயில்களுக்கு புதிய பதிவுகள் தொடங்கப்பட்டன. முன்னரே இருந்த பதிவுகள் மேம்படுத்தப்பட்டு, உரிய இணைப்புகளும் தரப்பட்டன. வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சென்று புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, கூடுதல் செய்தியுடன் தொடர்பான கோயிலைப் பற்றிய பதிவு அவ்வப்போது மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:42, 23 பெப்ரவரி 2019 (UTC)
ஏமநல்லூர்
[தொகு]திருலோகி சுந்தரேசுவரர் கோயில் கோயிலே ஏமநல்லூர் கோயிலாகும். ஆகவே முந்தைய இணைப்பு நீக்கப்பட்டு, இவ்விணைப்பு தரப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:33, 23 ஆகத்து 2019 (UTC)
@பா.ஜம்புலிங்கம்: ஒரே கோயிலுக்கு, இரு கட்டுரைகள் உள்ளதா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 08:37, 23 ஆகத்து 2019 (UTC)
@Gowtham Sampath:, வணக்கம். ஒரே கோயிலுக்கு இரு கட்டுரைகள் இல்லை. திருலோகி சுந்தரேசுவரர் கோயில் என்பதும், ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் என்பதும் தனித்தனி பதிவுகளாக உள்ளன. இவ்விரு கோயில்களில் ஏமநல்லூர் எனப்படும் திருலோக்கி சுந்தரேசுவரர் கோயிலைப் பற்றி ஏமநல்லூர் - (திருலோக்கி) என்ற தளத்தில் ஏமநல்லூர் - (திருலோக்கி) Yemanallur - (Thirulokki) வைப்புத் தலமாகும் என்றும், திருவிசைப்பா தலமும் ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைப்போலவே அக்கோயில் வைப்புத்தலம் என்றும், மக்கள் வழக்கில் திருலோக்கி என்று வழங்கப்படுகிறது என்றும் வழங்கப்படுவதாகவும், இது திருவிசைப்பா தலமும் ஆகும் என்றும் பு.மா.ஜெயசெந்தில்நாதன் நூலில் (தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009, பக்.219) குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் திருலோக்கி சுந்தரேசுவரர் கோயில் வைப்புத்தலமாகவும், திருவிசைப்பா தலமாகவும் விளங்குகிறது என்பதை அறியமுடிகிறது. பிறிதொரு கோயிலான ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் கோயிலைப் பற்றி பு.மா.ஜெயசெந்தில்நாதன் நூலில் ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் குறிப்புகள் இடம்பெறவில்லை. தஞ்சைப்பகுதியில் உள்ள 27 வைப்புத்தலங்களில் ஏனநல்லூர் பெயரில் எதுவும் இல்லை. அவ்வகையில் நோக்கும்போது ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் கோயில் என்பது வைப்புத்தலங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதை ஊகிக்கமுடிகிறது. இருப்பினும் வேறு ஏதாவது பெயரில் இக்கோயில் வழங்கப்படுகிறதா என்பது உறுதிசெய்தபின் ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் வைப்புத்தலங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதோடு, வார்ப்புரு இணைப்பும் நீக்க முயற்சி மேற்கொள்ளப்படும். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:37, 23 ஆகத்து 2019 (UTC)