பகலொளி சேமிப்பு நேரம்
பகலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடை நேரம் என்பது பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும். இது பொதுவாக ஒரு மணி நேரமாகும். இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை, பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகிறது. "சேமிக்கப்பட்ட" பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இம்முறை பின்பற்றப்படாவிட்டால், காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.
பகலொளி சேமிப்பு நேரம் (அ) கோடைக்கால நேர வலயம் என்பது சூரிய ஒளி அதிகமாக இருக்கக் கூடிய கோடைக்காலங்களில், கடிகார நேரத்தை முன்கொண்டு செல்லும் வழக்கத்தைக் குறிக்கும். இதன் மூலம் மாலை நேரங்களில் அதிக நேரம் வெளிச்சத்தையும், காலை நேரங்களில் குறைந்த நேரம் வெளிச்சத்தையும் பெறலாம்.
இளவேனிற்காலத்தின் தொடக்கத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்கொண்டு செல்வதும், பின்பு இலையுதிர் காலத்தில் அந்த ஒரு மணி நேரத்தை பின்கொண்டு வருவதும் வழக்கம்.
பகலொளி சேமிப்புத் திட்டம் முதலில் George Vernon Hudson என்பவரால் 1895-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பின்பு 30 ஏப்ரல் 1916 அன்று இடாய்ச்சுலாந்து, ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகிய நாடுகளில் அமல் படுத்தப்பட்டது. 1970-களின் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளும் இந்தத் திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கின.
பகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில், பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அரசுகள், சூரிய ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால், இதனை பொதுவில் ஆற்றல் சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன. ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
ஐரோப்பாவில் இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு "கோடை" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை). மிகுதி, மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை). இந்நடைமுறை நேர வலயங்களுக்கு ஏற்பவும் மாறுபடக்கூடியது.
வரலாறு
[தொகு]பாரிஸ் இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், பகலொளி சேமிப்பு நேரம் பற்றி பெஞ்சமின் பிராங்க்லின் தெரிவித்துள்ளார்.[1] இருப்பினும், இக்கட்டுரையில் காணப்படும் நகைச்சுவைத் தொனி காரணமாக இதை அவர் உண்மையாகவே பிரெஞ்சு அரசுக்கு முன்மொழிந்தாரா அல்லது மக்கள் முன்னெழுந்து முன் உறங்கச் செல்ல வேண்டும் என கருதினாரா என்பது தெரியவில்லை.[2]
பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஒரு திட்டமாக வில்லியம் வில்லெட் என்பவரால் 1905 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.[3] பெருமளவிலான கையூட்டுகளைக் கொடுத்த போதிலும் பிரித்தானிய அரசு இதனை ஏற்கவில்லை.
பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஜெர்மன் அரசால் முதலாவது உலக போரின் போது 1916 இன் ஏப்ரல் 30 க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தப்பட்டது. உடனே ஐக்கிய இராச்சியமும் 1916 மே 21க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தியது.
செயல்முறை
[தொகு]பகலொளி சேமிப்பு செய்ய அமெரிக்க வழக்கப்படி, வசந்த காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். 2.00 மணி உள்ளூர் நேரத்தில் இருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும். அப்பொது கடிகாரங்கள் 01:59 லிருந்து முன்னோக்கி தாவி 3.0 மணிக்கு வந்து விடும். மேலும் அந்த நாள் 23 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும். அதேபோல் இலையுதிர் காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். மேலும் அந்த நாள் 25 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும்.
வாரநாள் அட்டவணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க பொதுவாக கடிகாரம் மாற்றங்கள் ஒரு வார நள்ளிரவில் திட்டமிடப்படும். சில பகுதிகளில் இருபது நிமிட மற்றும் இரண்டு மணி நேர மாற்றங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வட அமெரிக்காவில் ஒரு மணி நேர மாற்றம் 02:00 மணிக்கு நடைபெறும் - இளவேனிற்காலத்தில் 01:59 மணிக்கான அடுத்த நிமிடத்தில் நேரம் 03:00 DST-ஆக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 23 மணி நேரங்களே இருக்கும். அது போல இலையுதிர்காலத்தில் 01:59 DST-ல் நேரம் 01:00 மணியாக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 25 மணி நேரம் உண்டு. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் மாற்றம் 01:00 UTC-ல் நடப்பதால், இலையுதிர்கால மாற்றம் இளவேனிற்கால மாற்றத்திற்கு 1-மணி நேரம் தாமதமாக நடக்கும்.
நேர மாற்றங்கள் பெரும்பாலாக வாரக் கடைசியின் நள்ளிரவிலேயே நடைபெறும். இதன் மூலம் வேலை நாட்களில் இடையூறுகள் தவிர்க்கப்படும்.
தொடக்க மற்றும் முடிவுத் தேதிகள் நாடு மற்றும் ஆண்டைக் கொண்டு மாறு படுகின்றன. 1996-ம் ஆண்டு முதலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத கடைசி ஞாயிறு முதல் அக்டோபர் மாத கடைசி ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதற்கு முன்னர் ஐரோப்பாவில் இந்த ஒற்றுமை இல்லை. 2007-ம் ஆண்டு முதலாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத இரண்டாவது ஞாயிறு முதல் நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது.
தென் துருவத்தில் சுமாராக இந்த நடைமுறை நேர்மாறாக கடை பிடிக்கப் படுகின்றது. உதாரணமாக Chile நாட்டில் இந்த நடைமுறை அக்டோபர் மாத இரண்டாவது சனி முதல் மார்ச் மாத இரண்டாவது சனி வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதனால் பிரித்தானிய நாட்டுக்கும் Chile நாட்டுக்கும் இடையே வேறுபாடு - வட துருவ கோடையில் 5 மணி நேரமாகவும், வட துருவ குளிரில் 3 மணி நேரமாகவும், இடைப்பட்ட குறுகிய காலத்தில் 4 மணி நேரமாகவும் இருக்கும்.
பகலொளி சேமிப்புத் திட்டம் பொதுவாக பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் கடை பிடிக்கப் படுவதில்லை. சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்கள் வெகுவாக மாறு படாமல் இருப்பதே இதற்குக் காரணம். சில நாடுகள் இந்தத் திட்டத்தை சில பகுதிகளில் கடை பிடிக்கின்றன; உதாரணமாக Brazil நாட்டில் இது தெற்கில் மட்டும் கடை பிடிக்கப் படுகின்றது. ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் பெரும்பாலாக கடை பிடிக்கப் படாததால் இந்தத் திட்டம் உலகின் சிறிதளவு மக்களாலேயே பயன் படுத்தப் படுகின்றது.
நன்மைகள் மற்றும் குறைபாடுகள் மீதான கருத்துவேறுபாடு
[தொகு]- ப.சே.நே. ஆதரவாளர்கள் பொதுவாக சக்தி சேமிக்கப்படுவதாகவும் மாலை வெளிப்புற ஓய்வு நடவடிக்கை ஊக்குவிக்கப்படுவதால் உடல் மற்றும் உளவியல் சுகாதார நன்மை பேணப்படுவதாகவும், இதன் காரணமாக போக்குவரத்து விபத்துகள் மற்றும் குற்றம் குறைக்கிறது என்று வாதிடுகின்றனர்.
- எதிர்ப்பாளர்கள் ஆற்றல் சேமிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்காது எனவும், ப.சே.நே. காலை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் எனவும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை எதிர்க்கும் குழுக்கள் பெரும்பாலும் விவசாயிகள்,[4] போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் உட்புற (அல்லது இருட்டு சார்ந்த) பொழுதுபோக்கு வர்த்தகங்கள்.[5]
எரிபொருள் பயன்பாடு
[தொகு]ஆற்றல் சேமிப்பில் குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவது முதன்மையாக வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இதற்காக மின்சாரம் 3.5% பயன்படுத்துகிறது. சூரியன் மறையும் மற்றும் உதிக்கும் நேரம் தாமதித்தால் மாலை குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவதற்கான செயற்கை ஒளியின் பயன்பாடு குறைக்கிறது. ஆனால் காலையில் அது அதிகரிக்கிறது. இதனால் குறிப்பிடத்தக்க அளவிற்கு எரிபொருள் சேமிப்பு இருக்காது.
பொருளாதார விளைவுகள்
[தொகு]சில்லறை வியாபாரிகள், விளையாட்டு பொருட்கள் தயாரிப்பாளர்கள், மற்றும் பிற வணிகர்கள் கூடுதல் பிற்பகல் சூரிய ஒளியால் பயனடைவார்கள். அது கடைவீதி சென்று பொருட்கள் வாங்குவதற்கும், வெளிப்புற விளையாட்டு பங்கேற்கவும் வாடிக்கையாளர்களை தூண்டுகிறது.[6] ஒரு 1999 ஆய்வு, ப.சே.நே. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓய்வு துறை வருவாயை 3% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மாறாக, விவசாயிகள் மற்றும் சூரிய ஒளியால் வேலை நேரம் நிர்ணயம் செய்யப்படும் மற்றவர்கள் பாதிப்படைவார்கள்.[7][8]
குறிப்புகள்
[தொகு]- ↑ "முழு கட்டுரையைக் காண்க". Archived from the original on 2010-01-15. பார்க்கப்பட்ட நாள் 2006-08-30.
- ↑ பிராங்க்லினின் முன்னெழுந்து முன் உறங்கச் செல்தல் மனிதர்களின் செல்வம், அறிவு, நலம் ஆகியவற்றை கூட்டும் என்ற சொற்கள், அவரது நாட்டினரை முன்னெழுந்து வேலைக்கு சென்று மாலையில் இருளின் போது உறங்கத் தூண்டியது. இதன் மூலம் மெழுகுவர்த்திகளுக்கான செலவு குறைக்கப்பட்டது.பெஞ்சமின் பிராங்க்லின் பரணிடப்பட்டது 2007-04-13 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "பகலொளியின் வீணடிப்பு". Archived from the original on 2010-09-30. பார்க்கப்பட்ட நாள் 2006-08-30.
- ↑ "Daylight savings time". Session Weekly (Minnesota House Public Information Office). 1991. http://www.house.leg.state.mn.us/hinfo/swkly/1995-96/select/time.txt. பார்த்த நாள்: 10 December 2013. "... the Minneapolis Star, Jan. 28, 1959 ... [stated] 'Farmers complained that they cannot get into the fields any earlier than under standard time ... because the morning sun does not dry the dew "on daylight savings time." ' "
- ↑ "Did Daylight Saving Time Make The Drive-in Theater Go Dark". Southern Outdoor Cinema. பார்க்கப்பட்ட நாள் 10 December 2013.
Parents reluctant to take their families for showings starting too late
- ↑ Dana Knight (2006-04-17). "Daylight-saving time becomes daylight-spending time for many businesses". Indianapolis Star.
- ↑ Effect on those whose hours are set by the sun:
- Spring Forward. pp. 19–33.
- Seize the Daylight. pp. 103–110, 149–151, 198.
- ↑ "Should we change the clocks?". National Farmers Union. Archived from the original on 14 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 10 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)