உள்ளடக்கத்துக்குச் செல்

கபிலவஸ்து (பண்டைய நகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னர் சுத்தோதனர் யானை மீது அமர்ந்து ஊர்வலமாகச் சென்று புத்தரைக் கண்டு, ஆலமரத்தை வழங்குதல். மேற்புறத்தில் மாயாவின் கனவில் யானை. சாஞ்சி சிற்பம்[1]
சிற்பத்தின் மேற்புறத்தில் கௌதம புத்தர் பிறக்கும் முன், மாயாவின் கனவில் யானை

கபிலவஸ்து (Kapilavastu) கௌதம புத்தர் பிறந்த சாக்கிய குலத்தவர்களின் நகரம் ஆகும். தற்போது பண்டைய கபிலவஸ்து நகரம், இந்தியாவில் உள்ள பிப்ரவா எனும் கிராம அளவில் சுருங்கி விட்டது. பிப்ரவா கிராமம், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சித்தார்த்தநகர் மாவட்டத்தில் உள்ள பன்சி தாலுக்காவில் உள்ளது. சித்தார்த்தநகர் மாவட்டத் தலைநகரமான நௌகருக்கு வடக்கே 22 கிமீ தொலைவில் பிப்ரவா கிராமம் உள்ளது.

வரலாறு

[தொகு]

புத்தரின் தந்தை சுத்தோதனர் - தாய் மாயா வாழ்ந்த நகரம் ஆகும். புத்தர் தமது 29வது அகவையில், மனைவி யசோதரை, மகன் ராகுலனை அரண்மனையில் விட்டகன்று, துறவறம் மேற்கொள்ளும் வரை கபிலவஸ்துவின் அரண்மனையில் வாழ்ந்தவர்.[2]

சீன நாட்டு பௌத்தப் பிக்குகளான பாசியான் மற்றும் யுவான் சுவாங் ஆகியோர் கபிலவஸ்து நகரத்திற்கு புனித யாத்திரையாக வந்துள்ளனர்.[3][4][5][6]

அகழ்வாராய்ச்சிகள்

[தொகு]

19ம் நூற்றாண்டின் வரலாறு மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்களில் ஒரு பிரிவினர், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சித்தார்த் மாவட்டத்தின் வடக்கில் இந்திய-நேபாள எல்லைப்புறத்தில் உள்ள பிப்ரவா கிராமத்தில் அகழாய்வின் போது தூபியும், விகாரையும் கிடைத்துள்ளதால், இக்கிராமமே கௌதம புத்தர் வாழ்ந்த பண்டைய கபிலவஸ்து நகரம் என்றும், மற்றொரு பிரிவினர், பண்டைய கபிலவஸ்து நகரம், இந்தியா - நேபாள எல்லையில், நேபாள நாட்டின் கபிலவஸ்து மாவட்டத்தில் உள்ள திலௌராகோட் எனுமிடத்திலிருந்து வடமேற்கே பத்து மைல் தொலைவில் உள்ளதென்றும் கூறுகின்றனர்.[7][8] [9][10][11][12]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Marshall p.64
  2. Trainor, K (2010). "Kapilavastu". In Keown, D; Prebish, CS (eds.). Encyclopedia of Buddhism. Milton Park, UK: Routledge. pp. 436–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-55624-8.
  3. Beal, Samuel (1884). Si-Yu-Ki: Buddhist Records of the Western World, by Hiuen Tsiang. 2 vols. Translated by Samuel Beal. London. 1884. Reprint: Delhi. Oriental Books Reprint Corporation. 1969. Volume 1
  4. Beal, Samuel (1911). The Life of Hiuen-Tsiang. Translated from the Chinese of Shaman (monk) Hwui Li by Samuel Beal. London. 1911. Reprint Munshiram Manoharlal, New Delhi. 1973. Internet Archive
  5. Li, Rongxi (translator) (1995). The Great Tang Dynasty Record of the Western Regions. Numata Center for Buddhist Translation and Research. Berkeley, California. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-886439-02-8
  6. Watters, Thomas (1904). On Yuan Chwang's Travels in India, 629-645 A.D. Volume1. Royal Asiatic Society, London.
  7. Tuladhar, Swoyambhu D. (November 2002), "The Ancient City of Kapilvastu - Revisited" (PDF), Ancient Nepal (151): 1–7
  8. Chris Hellier (March 2001). "Competing Claims on Buddha's Hometown". Archaeology. பார்க்கப்பட்ட நாள் 21 March 2011.
  9. Srivastava, KM (1980). "Archaeological Excavations at Piprāhwā and Ganwaria and the Identification of Kapilavastu". The Journal of the International Association of Buddhist Studies 13 (1): 103–10. http://journals.ub.uni-heidelberg.de/index.php/jiabs/article/download/8511/2418. 
  10. "UP's Piprahwa is Buddha's Kapilvastu?".
  11. "Kapilavastu". Archived from the original on 8 ஜனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 1 March 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. Huntington, John C (1986), "Sowing the Seeds of the Lotus" (PDF), Orientations, September 1986: 54–56, archived from the original (PDF) on November 28, 2014

ஆதார நூற்பட்டியல்

[தொகு]