ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்
Appearance
(ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உள்ளடக்கில் இருக்கிற அரசியல் பிரிவுகள் (US State) :
- ஐம்பது மாநிலங்கள் (அதிகாரபூர்வமாக 46 மாநிலங்களும் நான்கு பொதுநலவாயங்களும்). இந்த மாநிலங்கள் மாவட்டங்கள், நகரங்கள், ஊர்களாக பிரிந்து கொண்டு இருக்கின்றன. அமெரிக்க ஆரம்பத்தில் இருந்த 13 மாநிலங்களை தவிர பல மாநிலங்களும் அமெரிக்க காங்கிரஸ் சட்டத்தின் படி ஐக்கிய அமெரிக்காவில் சேர்க்கப்பட்டன.
- கொலம்பியா மாவட்டம் என்றழைக்கப்பட்ட சிறப்பு மாவட்டம். இங்கேயே அமெரிக்கத் தலைநகரம் அமைந்துள்ளது. கொலம்பியா மாவட்டத்துக்கு அமெரிக்க சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லை.
- பழங்குடிகளுக்கு ஒதுக்கிய நிலங்கள்: அனைத்து ஒதுக்கிய நிலங்களும் ஏதாவது ஒரு மாநிலத்தில் அமைந்துள்ளன, ஆனால் இப்பகுதிகளுக்கு ஓரளவு விடுதலை உள்ளது. சில மாநில சட்டங்கள் இப்பகுதிகளில் பயன்பாட்டில் இல்லை.
- அமெரிக்காவின் நிலப்பகுதிகள்: பால்மைரா அடோல் மட்டும் அமெரிக்காவின் ஒருங்கிணைக்கப்பட்ட நிலப்பகுதி (incorporated territory), ஆனால் பல நிலப்பகுதிகள் ஒருங்கிணைக்கப்படவில்லை.
- இராணுவத் தளங்கள்: குவாண்டானமோ விரிகுடா போன்ற இடங்களில் இராணுவத் தளங்கள் அமெரிக்க நிர்வாகத்தில் உள்ளன. வெளிநாடுகளில் அமைந்த தூதரகங்களும் அமெரிக்க நிர்வாகத்தில் உள்ளன.
மொத்தத்தில் அமெரிக்காவில் ஏறத்தாழ 85,000 அரசியல் பிரிவுகள் உள்ளன.