உள்ளடக்கத்துக்குச் செல்

அவதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஷ்ணுவின் தசாவதாரம்

அவதாரம் என்பது தர்மக் கோட்பாட்டு சமயங்களான இந்துசமயத்திலும் அய்யாவழியிலும் குறிப்பிடப்படும் ஒரு கோட்பாடு ஆகும். இரு சமயங்களிலும் பொதுவாக திருமாலே அவதாரக்கடவுளாக கருதப்படுகிறார். மனிதன் மற்றும் அனைத்து சீவராசிகளும் பூமியில் கர்ம வினை காரணமாக பிறப்பெடுக்கிறது. ஆனால் இறைவன் எவ்வித கர்ம வினையின்றி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே பூமியில் அவதாரம் எடுக்கிறார். இவ்விடம் அவதாரம் எனபதற்கு இறங்கி வருதல் என்று பொருள்.

திருமாலின் அவதாரங்கள்

விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்.[1]

அதுமட்டுமல்ல, புராணங்களின் கூட விஷ்ணுவின் பற்றி கூறப்படுகின்றன. மேலும் சீக்கிய மதத்திலும் விஷ்ணுவின் அவதாரங்களை பற்றி கூறப்படுகிறது.[2]

புராணம் அவதாரங்கள் அவதாரங்களின் பெயர்
பாகவதம் 24 ஆதிபுருஷர், சனகாதி, வராகர், நாரதர், நரநாராயணர், கபிலர், தத்தாத்ரேயர், யக்ஞர், பிருது, ரிஷபதேவர், அம்சம், ஹயக்ரீவர், மச்சம், கூர்மம், மோகினி, தன்வந்திரி, நரசிம்மர், வாமனர், வியாசர், பரசுராமர், ராமர், பலராம-கிருஷ்ணர், புத்தர், கல்கி
அக்னி 10 மச்சம், கூர்மம், வராகர், நரசிம்மர், வாமனர், பரசுராமர், ராமர், கிருஷ்ணர், புத்தர், கல்கி
கருட 22 சனகாதி, வராகர், நாரதர், நரநாராயணர், யக்ஞர், கபிலர், தத்தாத்ரேயர், பிருது, ரிஷபர், வியாசர், மச்சம், கூர்மம், மோகினி, தன்வந்திரி, நரசிம்மர், உருக்ராமர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், புத்தர், கல்கி
மானவ 42 ஆதிபுருஷர், ஜெகன்நாதர், சனகாதி, நாரதர், ஹயக்ரீவர், தத்தாத்ரேயர், யக்ஞர், கபிலர்,
வாயு 7 தத்தாத்ரேயர், பரசுராமர்,வியாசர், கிருஷ்ணர்

சிவபெருமானின் அவதாரங்கள்

சைவ சமயக்கடவுளான சிவபெருமான் அவதாரங்களை எடுப்பதில்லை என்ற நம்பிக்கை நிலவினாலும், சிவபெருமான் இருபத்து எட்டு அவதாரங்களை எடுத்ததாக மகாபுராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் கூறுகிறது.[3]

  1. ஸ்வேதா
  2. சுதாரா
  3. மதனன்
  4. சுஹோத்திரன்
  5. கங்கணன்
  6. லோகாக்ஷி
  7. ஜெய் கிஷ்ஹவ்யன்
  8. தாதிவாகன்
  9. ரிஷபன்
  10. பிருகு
  11. உக்கிரன்
  12. அத்திரி
  13. கவுதமன்
  14. வேதசீர்ஷன்
  15. கோகர்ணன்
  16. ஷிகந்தகன்
  17. ஜடமாலி
  18. அட்டஹாசன்
  19. தாருகன்
  20. லங்காலி
  21. மகாயாமன்
  22. முனி
  23. ஷுலி
  24. பிண்ட முனீச்வரன்
  25. ஸஹிஷ்ணு
  26. ஸோமசர்மா
  27. நகுலீஸ்வரன்
  28. அசுவத்தாமன்

பராசக்தியின் அவதாரங்கள்

  1. சதி
  2. பார்வதி
  3. காளி
  4. தாரா
  5. திரிபுரசுந்தரி
  6. புவனேசுவரி
  7. பைரவி
  8. சின்னமஸ்தா
  9. தூமாவதி
  10. பகளாமுகி
  11. மாதங்கி
  12. கமலாத்மிகா
  13. சைலபுத்ரி
  14. பிரம்மச்சாரிணி
  15. சந்திரகாந்தா
  16. குக்ஷ்மாந்தா
  17. கந்தமாதா
  18. காத்யாயனி
  19. காளராத்ரி
  20. மகாகௌரி
  21. சித்திதாத்ரி
  22. துர்க்கை
  23. கௌசிகி
  24. மஹாகாளி
  25. சப்தகன்னியர்
  26. விந்தியவாசினி
  27. சாகம்பரி
  28. பிரமாரி
  29. ரக்ததந்திகா
  30. பீமாதேவி
  31. பத்மாவதி
  32. த்வரிதா

விநாயகரின் அவதாரங்கள்

யுக அவதாரங்கள்

  1. மகாகடன்
  2. மயூரேசுவரன்
  3. கஜானனர்
  4. தர்மகேது

32 கணபதிகள்

  1. பால கணபதி
  2. தருண கணபதி
  3. மகா கணபதி
  4. வீர கணபதி
  5. வர கணபதி
  6. சித்தி கணபதி
  7. ஹேரம்ப கணபதி
  8. விக்ன கணபதி
  9. பக்தி கணபதி
  10. உச்சிஷ்ட கணபதி
  11. லட்சுமி கணபதி
  12. சக்தி கணபதி
  13. சங்கடஹரகணபதி

அஷ்ட விநாயகர்கள்

  1. வக்ரதுண்டன்
  2. ஏகதந்தன்
  3. விகடன்
  4. லம்போதரன்
  5. மஹோதரன்
  6. கஜமுகன்
  7. விக்னராஜன்
  8. துர்மவர்ணன்

லட்சுமிதேவியின் அவதாரங்கள்

ஆதிசேஷனின் அவதாரங்கள்

ஒவ்வொரு யுகத்திலும் மகாவிஷ்ணு அவதரிப்பதை போன்று அவரின் பக்தரான ஆதிசேஷனும் சில அவதாரங்களை எடுத்திருக்கிறார்.

  1. லட்சுமணன்
  2. பலராமன்
  3. ராமானுஜர்
  4. மணவாளி முனிகள்

மகாபாரதத்தில் அவதாரங்கள்

மகாபாரதத்திலும் அவதாரங்களை பற்றி கூறப்படுகிறது.

கதாபாத்திரம் யாருடைய அவதாரம்
கிருஷ்ணர் விஷ்ணு
பலராமர் ஆதிசேஷன்
ருக்மணி மகாலட்சுமி
ஆஞ்சநேயர் சிவபெருமான்
தருமன் எமனின் அம்சம்
பீமன் வாயுதேவனின் அம்சம்
அருச்சுனன் இந்திரனின் அம்சம்
நகுலன் அசுவினிகளின் அம்சம்
சகாதேவன் அசுவினிகளின் அம்சம்
கர்ணன் சூரியனின் அம்சம்
திரௌபதி இந்திராணியின் அம்சம்
விதுரர் எமனின் அவதாரம்
பீஷ்மர் பிரபாசன்(அஷ்ட வசுக்களின் ஒருவர்)
கங்கையின் ஏழு மகன்கள் வசுக்கள்
சிசுபாலன் ராவணன்
தந்தவக்ரன் கும்பகர்ணன்
ஜராசந்தன் விப்ரசித்தி
பகதத்தன் பாஷ்கலன்
குந்தி சித்தி தேவி
மாத்ரி திருதி
துரோணர் பிருகஸ்பதி
அசுவத்தாமன் சிவபெருமான்
சத்யபாமா பூமாதேவி
துரியோதனன் கலிபுருஷன்
அபிமன்யு வர்ச்சன் (சந்திரனின் மகன்)
துர்வாசர் சிவபெருமானின் அவதாரம்
பிரத்ம்யும்னன் மன்மதன்
வசுதேவர் காசியபர்
தேவகி அதிதி
யசோதை கோசலை
சுபத்ரை யோகமாயா
நந்தகோபர் தசரதர்
ரோகிணி கத்ரு
சகுனி துவாபர யுகம்
சல்லியன் சம்ஹலாதன் (பிரகலாதனின் சகோதரன்)
திருஷ்டகேது அனுஹலாதன்(பிரகலாதனின் சகோதரன்)
துருபதன் மருத்துக்களின் ஒருவர்
சாத்தியகி மருத்துக்களின் ஒருவர்
கிருதவர்மன் மருத்துக்களின் ஒருவர்
விராடன் மருத்துக்களின் ஒருவர்
கிருபர் ருத்ரர்களில் ஒருவர்
சந்தனு மகாபீஷன்
திருட்டத்துயும்னன் அக்னியின் அம்சம்
உக்கிரசேனர் சுவர்பானு
கம்சன் காலநேமி
ரோச்சமானன் அஸ்வக்ரீவன்
சேனாபிந்து துஹுண்டன்
கிராதன் ராகு
ஏகலைவன் குரோதவாசர்கள்
உருக்மி
ஜயத்சேனன் காலகேயர்கள்
சமுத்திரசேனன்
சிரேணிமத்
சிகண்டி அம்பா
பரசுராமர் மகாவிஷ்ணு
வேதவியாசர் மகாவிஷ்ணு/அபாரந்தமஸ்
தர்மவியாதன் ஒரு பிராமணன்
கீசகன் பாணன், காலகேயர்களின் தலைவன்
சாவித்ரி சாவித்ரி தேவியின் அம்சம்
கிருஷ்ணரின் 16,000 மனைவிகள் அப்சரஸ்கள்

தெரியுமா:

தேவர்கள் மட்டுமல்ல அசுரர்களும் மானிட வடிவில் பூமியில் மீண்டும் பிறந்ததாக மகாபாரதம் கூறுகிறது. அதோடு சில மகாபாரத கதைமாந்தர்களில் முற்பிறவியை பற்றி சில புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

  • கிராதன் என்பவன் மகாபாரதத்தில் அபிமன்யுவிடன் போரிட்டவர்களின் ஒருவன்; இவன் ராகுவின் அவதாரமாவான்.
  • துரியோதனனின் சகோதரர்கள் அசுரர்களின் அவதாரமாவர்.

மேற்கோள்கள்

  1. "The 10 Avatars of Vishnu". Archived from the original on 2016-03-31. பார்க்கப்பட்ட நாள் 2016-06-06.
  2. SS Kapoor and MK Kapoor(2009), Composition 8,9 and 10, Dasam Granth
  3. 19 avatars of Lord Shiva
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவதாரம்&oldid=4000909" இலிருந்து மீள்விக்கப்பட்டது